ஜெருசலேம் தீவிரவாத தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் கண்டனம்
ஜெருசலேமில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இளம் கனேடியர் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத தாக்குதலில் இளம் கனேடியர் மரணித்தமை அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்து விதமான வன்முறைகளையும் கனடா வன்மையாக கண்டிப்பதாகவம் தாக்குதலில் காயமடைந்த அனைவர் தொடர்பிலும் கரிசனையை வெளியிடுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியள்ளார்.
இதேவேளை, இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மிலேன் ஜோலி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மக்களுடன் கனடா தொடர்ந்தும் இணைந்திருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.