கனடாவில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி நபர்; கூறுவது என்ன!
கனடா பிராம்டனில் தனது வீட்டுக்கான பாதையில் அரிவாள் மற்றும் கோடரியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி நபர் , முதல்முறையாகப் பேசியுள்ளார்.
ஒன்ராறியோவின் பிராம்டனில் ஆக்ஸ்ட் 4 ம் திகதி இந்திய வம்சாவளி ஊடக பிரபலமான ஜோதி சிங் மான் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது வாகனத்தின் அருகாமையில் வைத்தே கோடரியுடன் நெருங்கிய ஒருவரால் மான் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல்காரகளின் மூர்க்கத்தனம்
சம்பவத்தின் போது வாளுடன் தென்பட்ட நபரே தம்மை சரமாரியாக தாக்கியதாக கூறும் மான், முதலில் வாகனத் திருட்டுக்கு அந்த மர்ம நபர்கள் முயல்வதாக கருதி, சாவியை நீட்டியுள்ளார்.
இருப்பினும் அவர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை எனவும், வாளால் வெட்டப்பட்டு கோடரியால் தாக்குதலுக்கு இலக்கானது மட்டுமின்றி தம்மீது மிளகு ஸ்பிரே பயன்படுத்தியதாகவும் மான் தெரிவித்துள்ளார்.
தமக்கு என்ன நேர்கிறது என்பதை புரிந்து கொள்ளவே ஒரு கணம் முடியாமல் போனது என கூறும் மான், தாயார் மட்டும் அப்போது அப்பகுதிக்கு வரவில்லை என்றால் அவர்கள் தம்மை கொன்றிருப்பார்கள் என்றார்.
தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் தம்மை கண்காணித்தபடி சுமார் இரண்டு மணி நேரம் அப்பகுதியில் சுற்றி வந்ததாக மான் நினைவு கூர்ந்துள்ளார்.
கவலை
படுகாயங்களுக்குள்ளான அவருக்கு மருத்துவமனையில், அவருக்கு அறுவை சிகிச்சை மற்றும் 180 க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டதாக மான் கூறினார்.
அது மட்டுமின்றி, அவர் கால்விரல் துண்டிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டதாகவும், அவரது கை நரம்புகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், பல எலும்பு முறிவுகள் மற்றும் வெட்டுக்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறினார்.
அந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் மூன்று மணி நேரத்திற்கு மேல் தம்மால் தூங்க முடியவில்லை எனவும், உளவியல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் மான் கூறியுள்ளார்.
அதேசமயம் தன் மீதான தாக்குதலுக்கு என்ன காரணம் என தமக்கு இதுவரை புரியவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.