அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் - இந்திய பிரதமர் மோடி இன்று சந்திப்பு
4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison), அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் (kamala haris) ஆகியோருடன் பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ளார்.
வாஷிங்டனில் உள்ள விமானப்படை தளத்திற்கு தனி விமானத்தில் சென்றடைந்த மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத்தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அரசு உயரதிகாரிகளும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவும் வரவேற்றனர்.
இந்தநிலையில், முதல் கட்டமாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
அத்துடன் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்தித்து பேச உள்ளனர்.
மேலும் இந்த சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.