வணிக வளாகத்தில் எற்பட்ட பாரிய தீ விபத்து : 09 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
பாகிஸ்தான் - கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் இன்றையதினம் (25-11-2023) இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரத்தில் உள்ள பல மாடி RJ ஷாப்பிங் மாலில் அதிகாலையில் தீப்பிடித்ததாகவும், தீயணைப்புப் படையினர் சுமார் 50 பேரைக் காப்பாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்னும் அதிகமானோர் கட்டிடத்திற்குள் இருந்ததாக உள்ளூர் ஒளிபரப்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.