முன்னாள் கணவர் மற்றும் காதலருடன் விடுமுறையை செலவிட்ட கேற்றி பெர்ரி
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரியைக் காதலிக்கும் விடயம் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம்.
தற்போது, தனது காதலர் மற்றும் முன்னாள் கணவர், குழந்தையுடன் தனது விடுமுறையை செலவிட்டதைக் காட்டும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் கேற்றி பெர்ரி.

கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, 18 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவியான சோபி ட்ரூடோவை 2023ஆம் ஆண்டு பிரிந்தார். தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரிக்கு, ஆறு காதலர்கள், ரஸ்ஸல் பிராண்ட் என்பவரை திருமணம் செய்து அவருடன் ஓராண்டு வாழ்ந்து பிரிந்தார்.
அதற்குப் பின் 2019ஆம் ஆண்டு, ஓர்லாண்டோ ப்லூம் என்பவருடன் பெர்ரிக்கு நிச்சயதார்த்தம் நிகழ்ந்தது. 2020ஆம் ஆண்டு அவருக்கு டெய்சி என்னும் பெண் குழந்தை பிறந்த நிலையில், 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் பிரிந்தார்கள்.
இந்நிலையில், அதே மாதத்தில் ஜஸ்டின் ட்ரூடோவும் பெர்ரியும் இணைந்து நடமாடும் புகைப்படங்கள் வெளியாகத் துவங்கின.
ஆக, ட்ரூடோவும் பெர்ரியும் அதிகாரப்பூர்வமாக காதலர்களாகிவிட்ட நிலையில், தனது விடுமுறைக் கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பெர்ரி.
அந்த புகைப்படங்களில், பெர்ரியும் ட்ரூடோவும் இணைந்திருக்கும் புகைப்படங்களுடன், பெர்ரியும் அவரது முன்னாள் காதலரான ஓர்லாண்டோவும், மகள் டெய்சியும் இணைந்திருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

தன் தந்தையான ஓர்லாண்டோவின் கழுத்தில் அமர்ந்திருக்கும் டெய்சி, தன் தாயான பெர்ரியின் தலையில் சாய்ந்திருக்க, ஓர்லாண்டோவின் மற்றொரு கை அவரது மகனான ஃப்ளின்னை அணைத்துக்கொண்டிருக்கிறது.
ஃப்ளின், ஓர்லாண்டோவுக்கும் அவரது முன்னாள் மனைவியான மிராண்டா கெர்ருக்குப் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.