அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த விமானம் விபத்து

United States of America Flight Washington
By Sulokshi Jul 24, 2026 08:18 AM GMT
Report

  அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று, அவசரமாக நீரிலிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியதில் பயணிகள் பலர் காயமடைந்ததுடன், ஒருவர் உயிருக்குப் போராடி வருகின்றதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டனில் உள்ள சுசியா தீவுக்கு (Sucia Island) அருகே உள்ள 'ஷாலோ பே' (Shallow Bay) பகுதியில், உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 5:15 மணியளவில் விபத்துக்குள்ளானது.

அமெரிக்காவில் 11 பேருடன் பயணித்த விமானம் விபத்து | Kenmore Seaplane Crashes Near Sucia Island

 புறப்பட்ட 45 நிமிடங்களில் விமானம் விபத்து

இது சீயட்டில் (Seattle) நகரிலிருந்து புறப்பட்ட 45 நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 'கென்மோர் எயார்' (Kenmore Air) நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம், 'ரோச் ஹார்பர்' (Roche Harbor) நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அதன் விமானி அவசரமாகத் தரையிறக்க முயன்றதாகவும், அதன்பின்னரே விமானம் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமானம் எரிந்து சாம்பலான போதிலும், அதிர்ஷ்டவசமாக, விமானி உட்பட பயணித்த 11 பேரும் ஆல்ஃபா (உயிருடன்) மீட்கப்பட்டுள்ளனர். விமான விபத்து தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: "விபத்தில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

மற்றவர்களுக்குத் தலைக்காயம், எலும்பு முறிவுகள் மற்றும் வெட்டுக் காயங்கள் உள்ளிட்ட பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்தனர். காயமடைந்த பயணிகளில் இருவர் அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் மூலம் 'பெல்லிங்ஹாம்' (Bellingham) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும் இருவர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அருகில் உள்ள 'ஒர்காஸ் தீவுக்கு' (Orcas Island) அழைத்துச் செல்லப்பட்டனர்.

அமெரிக்கக் கடலோரக் காவல்படை மற்றும் 'சான் ஜுவான் கவுண்டி' ஷெரிப் அலுவலகம் உள்ளிட்ட பல அவசர கால மீட்பு முகமைகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக 'ஒர்காஸ் தீவு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை' தெரிவித்துள்ளது.   

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US