அமெரிக்க தொழில்நுட்பக் குழுவில் இந்தியருக்கு முக்கிய பதவி
அமெரிக்க எம்.பி.யின் கிரிப்டோ டெக்னாலஜி நிர்வாகக் குழுவின் தலைமைப் பொருளாதார மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆலோசகராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி எம்.பியான பீட் செஷன்ஸ்,
அமெரிக்க வாழ் இந்தியரான ஹிமான்ஷு படேலை தனது கிரிப்டோ டெக்னாலஜி நிர்வாகக் குழுவில் தலைமைப் பொருளாதார மேம்பாடு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு ஆலோசகராக நியமித்துள்ளார். இது தொடர்பில் பீட் செஷன்ஸ் கூறியது, "நிதி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் முன்னணியில் இருக்க வேண்டும். இ
தற்காக ஹிமான்ஷு படேலுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது ஆலோசனை எனது குழுவிற்கு மிகவும் தேவை. திறமையான நிபுணர்கள் மற்றும் உலகத் தலைவர்களுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பை விரும்புகிறேன், ”என்று அவர் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹிமான்ஷு படேல்,
"கிரிப்டோ டெக்னாலஜி செயற்குழுவில் எனது நியமனம், 'டிஜிட்டல் கரன்சி மற்றும் கிரிப்டோகரன்சி' குறித்த கூட்டு விவாதங்களுக்கு வழிவகுக்கும். மேலும் இது உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க உதவும்,'' என்றார்.
ஹிமான்ஷு படேல் அமெரிக்காவில் உள்ள ட்ரைடன் எலக்ட்ரிக் வாகனங்களின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
இந்தியாவில் மின்சார லொறிகள் மற்றும் கார்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.