ஈரான் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா தரப்பில் வெளியான முக்கிய தகவல்
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களில் படுகாயமடைந்த ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனியின் தற்போதைய நிலைமை பற்றி அமெரிக்கா தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரான் மீதான போரின் தொடக்கத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா்.

அவரைத் தொடா்ந்து, அவரின் மகன் மோஜ்தபா கமேனி (56) பொறுப்பேற்றாா்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதலில் மோஜ்தபா கமேனியும் காயமடைந்திருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவா் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை.
இந்த நிலையில், கமேனி உயிருடன் இருக்கிறார் என்ற தகவலை அமெரிக்கா செவ்வாய்க்கிழமை(ஜூன் 2) உறுதி செய்தது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ குறிப்பிடும்போது, கமேனி உடல்நிலை முன்னேற்றமடைந்து அதிக செயல்பாட்டுத் திறனுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.