பல நாட்களுக்கு பிறகு வெளி உலகிற்கு வந்த கிம்மின் மனைவி
வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னின் மனைவி கடந்த 5 மாதங்களில் முதல் முறையாக வெளி உலகத்திற்கு வந்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக சமீபகாலமாக வெளி உலகிற்கே வராமல் இருந்த, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவி ரி சோல் ஜு (Ri Sol Ju), கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக அரசு ஊடகங்களில் தோன்றினார்.
ரி சோல் ஜு கடைசியாக செப்டம்பர் 9 அன்று, நாடு நிறுவப்பட்ட ஆண்டு விழாவில், கிம்மின் மறைந்த தாத்தா மற்றும் தந்தையின் பதப்படுத்தப்பட்ட உடல்களை வைத்திருக்கும் சூரியனின் கும்சுசன் அரண்மனைக்கு தனது கணவருடன் சென்றபோது பொதுவில் காணப்பட்டார்.
இதற்கு முன்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கச்சேரி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக அவர் பொது வெளியில் வராமல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.