ஐ எஸ் தீவிரவாதிகளினால் சிறைபிடிக்கப்பட்ட கனடியப் பெண் விடுதலை
ஐஎஸ் தீவிரவாதிகளினால் சிறைபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் கொலம்பிய பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்தவர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த பெண் கடந்த மூன்று ஆண்டுகளாக சிரியாவில் சிறைபிடிக்கப்பட்டு இருந்தார் கிம்பிலி பால்மன் என்ற பெண்ணே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சிரியாவில் இருந்து விரைவில் கனடா நோக்கி பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கனடிய பெண்ணை விடுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் கனேடிய அரசாங்கம் எடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதே விதமாக சில கனடியர்கள் சிரியாவில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.