நிகழ்ச்சியில் ஒன்றில் நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ்!
74 வயதான மன்னர் சார்லஸ்(King Charles) லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக்கேற்ப நடனமாடி அசத்தினார்.
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அரியணை ஏறிய மன்னர் 3-ம் சார்லஸ் நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
As the Jewish community prepares to celebrate Chanukah, The King today joined holocaust survivors for a reception at @JW3London - a community centre that acts as a hub for the arts, culture, social action and learning in North London. pic.twitter.com/clUDM7X2K3
— The Royal Family (@RoyalFamily) December 16, 2022
அந்த வகையில் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் 3-ம் சார்லஸ்(King Charles) சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அப்போது 74 வயதான மன்னர் சார்லஸ் (King Charles) அங்கிருந்த நபர்களுடன் சேர்ந்து இசைக்கேற்ப நடனமாடி அசத்தினார்.