சார்ள்ஸ் மன்னருக்கு குதிரையை பரிசளித்த பிரபல நாட்டின் பொலிஸார்
கனடாவின் பொலிஸார் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸிற்கு குதிரையொன்றை பரிசாக வழங்கியுள்ளது.
நோபள் என்னும் பெயரினை உடைய குதிரையே இவ்வாறு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கனேடிய பொலிஸாரின் பிரபல்யமான இசை பவனி நிகழ்வுகளில் இந்த குதிரை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏழு வயதான இந்த குதிரை பிரித்தானியாவின் வின்ட்ஸோரில் வசிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமைதியான சுபாவம் மற்றும் இசை பவனி நிகழ்வில் காண்பித்த திறமைகள் என்பனவற்றின் அடிப்படையில் இந்த குதிரை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னர் சார்ள்ஸ் இந்தக் குதிரையை பார்வையிடும் புகைப்படமொன்றை அரச குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
கனேடிய பொலிஸார், பிரித்தானிய அரச குடும்பத்திற்கு குதிரைகளை பரிசாவ வழங்குவது பொதுவான நடைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1969ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையில் அப்போதைய பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்திற்கு எட்டு குதிரைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.