உக்ரைன் தலைநகரில் அலறிய சைரன் சத்தம்: நடுங்கவைத்த ரஷ்யா
உக்ரைன் தலைநகர் கீவில் திடீரென்று அலறிய சைரன் சத்தத்தை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு விரைந்துள்ள தககவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய பின்னர் ஒரே நாளில் 120 ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது வீசிய அடுத்த நாள், கீவ் நகரை இலக்கு வைத்து ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 2 மணிக்கு கீவ் நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு அவசரமாக எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளது. ரஷ்யா வான் தாக்குதலுக்க்கு திட்டமிடுவதாகவும், பெரும்பாலும் ட்ரோன் தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என கீவ் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், கீவ் பகுதி ஆளுநர் Olekskiy Kuleba தெரிவிக்கையில், ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கீவ் நகருக்கு 20 கி.மீ தெற்கே ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதை பிரபல செய்தி ஊடகம் ஒன்று நேரிடையாக பதிவு செய்துள்ளது. உக்ரைன் தரப்பு தெரிவிக்கையில், ஈரான் தயாரிப்பான 16 ட்ரோன்கள் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அத்தனை ட்ரோன்களும் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யா முன்னெடுக்கும் ட்ரோன் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் உக்ரைன் மீதான போருக்கு முன்னர் அளித்த ட்ரோன்களையே ரஷ்யா தற்போது பயன்படுத்தி வருவதாக ஈரான் விளக்கமளித்துள்ளது.
இதனிடையே, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 85 ஏவுகணை தாக்குதல், 35 ட்ரோன் தாக்குதல், 64 ராக்கெட் தாக்குதல்களை ரஷ்யா முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.