பிரித்தானியாவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த லேர்ரி பூனை!
பிரித்தானிய பிரதமராக பதவியேற்ற பின்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் (Rishi Sunak) ஆற்றிய முதல் உரையின்போது, லேர்ரி பூனையும் அந்த பகுதியில் ஓரத்தில் நின்றிருந்தது. அது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்ததுள்ளது.
பிரித்தானிய அமைச்சரவை அலுவலகத்திற்கு என அதிகாரப்பூர்வ பூனை உள்ளது. அதனை சீப் மவுசர் என அழைக்கின்றனர்.
பிரித்தானிய பிரதமராக வருபவர் சீப் மவுசராக பூனையை நியமிக்கும் அதிகாரம் பெறுகிறார். இந்த சீப் மவுசராக உள்ள லேர்ரி என்ற பூனை பெயரில் டுவிட்டர் கணக்கு ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரிஷி சுனக் புதிய பிரதமராக பதவியேற்ற பின்பு முதன் முறையாக உரையாற்றியபோது, லேர்ரி பூனை அந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டது. தெரு விளக்கு ஒன்றின் கீழ் அது அமர்ந்து கொண்டது.
இது தொடர்பில் சீப் மவுசர் டுவிட்டரில் வெளியிடப்பட்ட செய்தியில்,
எனது பழைய நண்பர் பைசல் இஸ்லாம், இந்த பகுதியில் உண்மையான தலைவராக (பாஸ்) இடம் பெறுவதற்கான விசயங்களை உறுதி செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.
இந்த புகைப்படத்திற்கு பலரும் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.