கனடிய விமான சேவைகளின் பணியாளர்களுக்கு நன்றி பாராட்டிய அனித ஆனந்த்
கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த், கனடிய விமான சேவைகளின் பணியாளர்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்து உள்ளார்.
க்யூபாவில் இருந்து கடைசியாகவும் பாதுகாப்பாகவும் பயணிகளை கனடாவிற்கு திரும்பச் செல்ல உதவிய அனைத்து விமான சேவை ஊழியர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
27,900க்கும் மேற்பட்ட பயணிகளை பாதுகாப்பாக கனடாவிற்கு திருப்பிச் செல்ல உதவிய அனைத்து கனடிய விமான சேவை நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் நன்றி என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்னும் க்யூபாவில் உள்ள பயணிகளுக்கு, சில சர்வதேச விமான நிறுவனங்கள் வழியாக வரையறுக்கப்பட்ட வர்த்தக பறப்புகள் இருக்கலாம் என அறிவுறுத்தினார்.
எனினும், கனடிய அரசு க்யூபாவிற்கு “அத்தியாவசியமல்லாத பயணத்தை தவிர்க்குமாறுபயண அறிவுரையை புதுப்பித்துள்ளது.
இந்த மாற்றம், அங்கே எண்ணெய், மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ பொருட்களின் திடீர் குறைவால் ஏற்பட்ட நிலைமைகளின் பின்னணியில் செய்யப்பட்டது.
அனித ஆனந்தின் நன்றி, கடுமையான சூழ்நிலையில் பணியாற்றிய விமான சேவை ஊழியர்களின் கடமை மற்றும் சிறப்பு சேவையை பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.