எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்ற எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை அதிகளவில் இந்தியர்கள்தான் பெற்று உள்ளனர்.
இதற்கிடையே எச்-1பி விசாவுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக ( உயர்த்தியது.

எச்-1பி விசா கட்டண உயர்வு
இந்த கட்டணத்தை வெளிநாட்டினரை பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் தலைமையிலான 19 மாகாணங்களின் கூட்டமைப்பு, மாசசூசெட்ஸ் கூட்டாட்சி நீதிமன்றில் வழக்கு தொடுத்துள்ளது.
அதில் எச்-1பி விசா கட்டண உயர்வு நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய பொது சேவைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா, டிரம்பின் சட்டவிரோதமான புதிய எச்-1பி விசா கட்ட ணம் உயர்வு என்பது ஆசிரி யர்கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், செவி லியர்கள் மற்றும் பிற முக்கிய துறைகளில் பணியாளர் பற்றாக்குறையை ஏற்படுத்திவிடும்.
இது கலிபோர்னியாவின் முக்கியமான சேவைகளை வழங்கும் திறனை ஆபத்தில் ஆழ்த்தும் என்றார்.