மறைந்த ரஷ்யா எதிர்கட்சி தலைவருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர்களுக்கு சிறைத்தண்டனை!
மறைந்த ரஷ்யா எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி Alexei Navalny சிறைச்சாலையில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக வாதிட்ட 3 வழக்கறிஞர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வடிம் கொப்சக், இகொர் செர்குயின், அலெக்சி லிப்ஸ்டின் ஆகிய 3 வழக்கறிஞர்களும் நவால்னிக்கு ஆதரவாக வாதிட்டனர்.
இதையடுத்து, இந்த மூன்று வழக்கறிஞர்களும் கடந்த 2023 ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு ரஷ்யாவின் விளாடிமிர் ஒப்லெஸ்ட் மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கில் உயிரிழந்த அலெக்சி நவால்னியின் வழக்கறிஞர்கள் மூன்று பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 3 பேருக்கும் மூன்றரை ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.