இஸ்ரேல் மீது மீண்டும் சராமரியாக ஏவுகணை தாக்குதல் நடாத்திய லெபனான்! 7 பேர் பலி
லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது நேற்றையதினம் (31-10-2024) சராமரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஒரு ஏவுகணை தாக்குதல் மூலம் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மற்றொரு ஏவுகணை தாக்கப்பட்டதில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்துள்ளது.
லெபனானில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ஏவுகணகைள் இஸ்ரேல் எல்லையை தாக்கியுள்ளன. இந்நிலையில் ஆலிவ் அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் மீது இந்த நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் உள்ள மெடுலா என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 1ஆம் திகதி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் இஸ்ரேலில் உள்ள மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
லெபனான் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதிய போர்நிறுத்த அழைப்புக்கு அமெரிக்கா முயற்சித்து வரும்நிலையில் லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதலில் வடக்கு இஸ்ரேலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் லெபனான் மீதான போரை இஸ்ரேல் அதிகப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது.