பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றி!
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி கூட்டணி எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது.
தீவிரவலதுசாரி கட்சியானஆர்எல் அதிகளவு ஆசனங்களை கைப்பறக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியாகியிருந்தது.
இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட மக்ரோனின் கட்சி
இந்த நிலையில் பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேசமயம் முதலாவது சுற்று தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதும் அதில் தீவிரவலதுசாரிகள் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன்காரணமாக பிரான்சில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் முதல்தடவையாக தீவிரவலதுசாரிகள் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அச்சநிலை உருவானது.