இத்துடன் முடித்துக்கொள்வோம், ஆனால் இவை அனைத்தும் வேண்டும் ; ஈரான் ஜனாதிபதியின் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால், ஈரான் முன்வைக்கும் மூன்று முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்த நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் அடிப்படையில், தெஹ்ரானின் இறையாண்மை மற்றும் அதன் சட்டபூர்வமான உரிமைகளை சர்வதேச சமூகம் முழுமையாக அங்கீகரிக்க வேண்டும்.

இதுவரை ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
வருங்காலத்தில் மீண்டும் இத்தகைய ஆக்கிரமிப்புகள் அல்லது தாக்குதல்கள் நடைபெறாது என்பதற்கு பலமான மற்றும் உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும்.
"இந்த அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே இப்பகுதியில் நிலையான அமைதி என்பது சாத்தியமாகும்," என ஜனாதிபதி பெசெஷ்கியான் சுட்டிக்காட்டியுள்ளார்.