என்.டி.பி கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
என்டிபி கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ஆளும் லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.
கடந்த பொது தேர்தலின் போது லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ள தவறியதன் காரணமாக என்டிபி கட்சி ஆதரவு வழங்கியது.
இதன் போது கூட்டணி அமைப்பதற்கு சில நிபந்தனைகளை என்டிபி கட்சி விதித்திருந்தது.
இதன் அடிப்படையில் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில் ஒரு வார காலத்திற்கு முன்னதாக என்.டி.பி கட்சி லிபரல் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது.
கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இது தொடர்பில் அறிவித்திருந்தார். லிபரல் கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தொடர்ந்தும் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கனடிய சுகாதார அமைச்சர் மார்க் ஹாலண்ட் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால பராமரிப்பு, மருந்து பொருள் தொடர்பான சட்டங்கள் பற்சுகாதாரம் தொடர்பான நலன் குறித்த திட்டங்கள் என பல்வேறு விடயங்களில் என்.டி.பி கட்சி லிபரல் கட்சியுடன் இணைக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இந்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் ஹொலண்ட் தெரிவித்துள்ளார்.