கனடிய எல்லைப் பாதுகாப்பு குறித்து கெரி ஆனந்தசங்கரியின் அறிவிப்பு
கனடாவில் எல்லபை் பாதுகாப்பு படையணியை பலப்படுத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்நாட்டு பொதுப்பாதுகாப்பு அமைசச்ர் கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கனடாவின் லிபரல் அரசு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் முக்கியமான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது.
அதன்படி, கனடா எல்லைப் பாதுகாப்பு சேவையில் (Canada Border Services Agency – CBSA) மேலும் 1,000 அதிகாரிகளை நியமிக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, போதைமருந்துகள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் திருடப்பட்ட வாகனங்களின் எல்லைக் கடத்தலை கட்டுப்படுத்தும் அரசுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஊடக அறிக்கையின்படி, கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவத்தின் ஆட்சேர்ப்பு கொடுப்பனவு வாரத்திற்கு 125 டொலரிலிருந்து 525 டொலராக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதோடு, 25 ஆண்டுகள் பணியாற்றிய எல்லை அதிகாரிகள் வயதைப் பொருட்படுத்தாமல் ஓய்வு பெறும் சலுகை வழங்கப்படுவதாகவும் அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, நவம்பர் 4 அன்று வெளியிடப்பட உள்ள இலையுதிர் கால வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறும் பல முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும்.