கனடிய யுவதியின் கொலையாளிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தண்டனை
கனேடிய யுவதி ஒருவரை படுகொலை செய்த பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தின் வெர்னன் என்னும் பகுதியைச் சேர்ந்த ஆஸ்லி வெட்ஸ்வோர்த் (Ashley Wadsworth) என்ற 19 வயது யுவதி கொடூரமாக கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
ஜாக்ஸ் செப்பல் (Jack Sepple) என்ற 23 வயதான நபரே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.
இணையத்தில் அறிமுகமாகிய பிரித்தானிய பிரஜையை சந்திப்பதற்காக கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றிருந்தபோது இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வெட்ஸ்வோர்த் தமது குடும்பத்தின் முதுகெலும்பு எனவும் அவரது இழப்பு பாரிய இழப்பு எனவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
19 வயதான குறித்த யுவதி தனது நண்பருடன் இணைந்து வாழ்வதற்காக பிரித்தானியா சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறேனினும் குறித்த நபர் இந்த யுவதியை 90 இடங்களில் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றச் செயலில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி குறித்த நபர் 23 அரை ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.