பொலிசார் கண்முன்னே... தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்ட நபரால் பரபரப்பு
பிரிட்டனில் சிறார் துஸ்பிரயோக குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பொலிசார் சுற்றிவளைத்த நிலையில், அவர் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கோர சம்பவமானது நேற்று பேஸ்புக் நேரலையில் பதிவாகியுள்ளது. ஆனால் பொலிஸ் தரப்பின் நடவடிக்கையை தொடர்ந்து குறித்த காணொளியை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கியுள்ளனர்.
தொடர்புடைய நபரை பொலிசார் சுற்றிவளைத்ததும், தமது காருக்குள் இருந்து கத்தி ஒன்றை எடுத்து அவரே தமது கழுத்தில் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
லிவர்பூல் காவல் நிலையத்திற்கு முன்பு குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறார் துஸ்பிரயோக குற்றவாளி என அவரை அடையாளம் கண்ட சிறப்பு பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்ய முயற்சிக்கும் நிலையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
உடனடியாக அவரை மீட்டு பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் எனவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், கிர்க்பி பகுதியை சேர்ந்தவர் அவர், 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி அவரிடம் பழகி வந்துள்ளார் எனவும், இவருக்கு 55 வயது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் கைதாகியுள்ளார் எனவும், விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.