பிரதமர் பதவிலிருந்து விலகிய பின் லிஸ் டிரஸ் நிகழ்த்திய உரை!
உக்ரைன் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது என்று முன்னாள் பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் (Liz Truss) உரையாற்றினார்.
பிரித்தானிய நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், (Rishi Sunak) அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசினார். அப்போது, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.
பிரித்தானிய நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னாள் பிரதமர் பின் லிஸ் டிரஸ் பதவி விலகினார். பதவி விலகிய பின் அவர் உறை ஒன்றை ஆற்றியுள்ளார்.
அவர் ஆற்றிய உரையில்,
பிரித்தானிய ராணி இராண்டாம் எலிசபெத்தின் (Queen Elizabeth II) இறுதி சடங்குகளின் போது பிரதமராக பணியாற்றக்கூடிய வாய்ப்பும் புதிய அரசராக சார்ல்ஸ் பொறுப்பேற்ற போது பணியாற்ற வாய்ப்பும் எனக்கு கிடைத்ததில் பெருமை அடைகிறேன்.
முந்தைய சர்வதேச சந்தையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களால் பாதிப்படைய கூடிய நிலை என்பது மாறி வருகிறது.
நமது நாட்டில் பல பகுதிகளில் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகிறது. வலியான நடவடிக்கைகளை தைரியமாக எடுக்க வேண்டிய கட்டத்தில் பிரித்தானிய இருக்கிறது.
மக்களுக்கு வாய்ப்புகளையும், சுதந்திரத்தையும் வழங்குவது நம்முடைய எண்ணம். முந்தைய எப்போதும் இல்லாத அளவுக்கு ரஷ்யா நடத்தக்கூடிய தாக்குதலில் உக்ரைன் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது.
பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.