கனடாவில் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பெண் கைது
கனடாவில் மிகவும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பெண் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கனடாவின் அலிஸ்டனில் வசிக்கும் 42 வயது பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.
குறித்த பெண் பாரி நகரில் வாகனத்தை மிக வேகமாக ஓட்டியதாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிக்கு 60 கிலோ மீற்றர் வேக வரம்பு உள்ள இடத்தில், அந்த பெண் 107 கிலோ மீற்றர் வேகத்தில் வடக்கு திசை நோக்கி வாகனத்தைச் செலுத்தியதாக பொலிஸ் அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்தப் பெண் வேகமாக வாகனம் செலுத்திய நேரத்தில் வாகனத்தில் இரண்டு சிறுவர் பயணிகள், குழந்தைகளுக்கான இருக்கைகளில் (car seats) அமர்ந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதி வேகமாகவும் ஆபத்தாகவும் வாகனத்தைச் செலுத்தியதாக குறித்த பெண் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண்ணின் அவரது வாகனம் 14 நாட்களுக்கு பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஓட்டுநர் உரிமம் 30 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.