சஸ்கட்வானில் மூன்று பேர் படுகொலை
கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
லொயிட்மின்ஸ்டர் பகுதியில் இந்த படுகொலை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கொலைகளுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு எனினும் இந்த சம்பவத்தினால் பொது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த முக்கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
குறித்த பகுதியில் நபர் ஒருவரும் அவரது இரண்டு மகன்களும் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் இரண்டு நாட்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        