சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்திற்கு பூட்டு
கொரோனா காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலகம் மற்றும் அலுவலக வளாகத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாள காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை தூதரகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலக ஊழியர்கள் வேலைக்கு சமூகமளிக்கமாட்டார்களென்றும் இதன்காரணமாக 5ஆம் திகதி வரை அலுவலகம் பார்வையாளர்களுக்காக மூடப்படும் என்றும் சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எனவே, அலுவலகத்திற்கு வருகைதருவோர் ஜனவரி 6ஆம் திகதி முதல் வருகை தரும் முன்னர் தூதரகத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.