சிட்னி போண்டி தாக்குதலில் லண்டன் பிரஜை உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த நபர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துனர்.

இந்த தாக்குதலில் லண்டனைச் சேர்ந்த 41 வயதான, ரப்பி எலி ஸ்க்லாங்கர் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான 50 வயதுடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 24 வயதான நவீத் அக்ரம் என பெயரிடப்பட்ட மற்றொரு துப்பாக்கிதாரி ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்