கனடாவின் முன்னணி நிறுவனமொன்றிடம் கப்பம் கோரும் சைபர் குற்றவாளிகள்
கனடாவின் முன்னணி நிறுவனமொன்றிடம், சைபர் குற்றவாளிகள் பல மில்லியன் டொலர்கள் கப்பம் கோரியுள்ளனர்.
லன்டன் ட்ரக்ஸ் என்னும் நிறுவனத்திடம் இவ்வாறு கப்பம் கோரப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பணியாளர்களின் தரவுகள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறுவனத்தின் தரவுத் தளத்திற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து தரவுகள் களவாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சைபர் தாக்குதல் காரணமாக மேற்கு கனடிய பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மேல் லண்டன் ட்ரக்ஸ் நிறுவனத்தின் கிளைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் தலைமைக் காரியாலய தரவுத் தளத்திற்குள் பிரவேசித்த தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சைபர் குற்றவாளிகளுக்கு கப்பம் வழங்க விரும்பவில்லை என லண்டன் ட்ரக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் 25 மில்லியன் டொலர்கள் கப்பமாக கோரப்பட்ட போதிலும் அதனை வழங்கத் தயாரில்லை அறிவித்துள்ளது.
எனினும், 8 மில்லியன் டொலர்களை வழங்கத் தயார் என லண்டன் ட்ரக்ஸ் நிறுவனம் இணங்கியதாக தாக்குதலை மேற்கொண்ட லொக்பிட் என்ற சைபர் குற்றக் குழு தெரிவித்துள்ளது.
லண்டன் ட்ரக்ஸ் நிறுவனம் கனடாவின் முன்னணி மருந்துக நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.