சிறுமி உட்பட சிக்கிய நால்வர்: நள்ளிரவில் இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்
பிரிட்டனில் 20 வயது கடந்த இளைஞர் ஒருவரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் 15 வயது சிறுமி உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கென்ட் நகரின் டோன்பிரிட்ஜில் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இளைஞர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவசர மருத்துவ உதவிக் குழுவினர் சம்பவப்பகுதிக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் காயங்கள் காரணமாக சம்பவயிடத்திலேயே குறித்த இளைஞர் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட நால்வரை இந்த வழக்கு தொடர்பில் கைது செய்துள்ளதாக கென்ட் நகர பொலிசார் அறிவித்துள்ளனர். மேலும், வயது முதிர்ந்த ஒருவரிடமும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தெற்கு லண்டனில் உள்ள கோல்ஸ்டனைச் சேர்ந்த 17 வயது சிறுவன், 15 வயது சிறுமி மற்றும் இரண்டு 16 வயது சிறுவர்கள், அனைவரும் டோன்பிரிட்ஜை சேர்ந்தவர்கள், சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, 47 வயது பெண் ஒருவரும் கைதாகியுள்ளதாகவும், அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.