உலகின் மிக நீண்ட நடைப்பந்தயம்; வெற்றிபெற்றோர் 49 பேர் மட்டுமே!
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குவீன்ஸ் பகுதியில், உலகின் மிக நீண்ட நடைப் பந்தய போட்டி இடம்பெற்றது. போட்டியில் கலந்துகொள்வோர், ஒரு புளெக்கைச் சுற்றி 4989 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டும்.
இந்நிலையில் புளோக்கைச் சுற்றி 5,649 முறை நடந்தால், பந்தயம் முடிவுறும். அதைச் செய்து முடிக்க சுமார் 2 மாதங்கள் எடுக்கும் என்று நம்பப்படுகிறது. அதோடு போட்டியில் கலந்துகொள்வோர் நாள்தோறும் 5 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை உலகின் இரண்டாவது பெரியதான இமயமலையின் உச்சத்தை ஆயிரக்கணக்கானோர் எட்டியுள்ளது. ஆனால் இந்த புளொக்கைச் சுற்றிய, உலகின் மிக நீண்ட பந்தயத்தில் கலந்துகொண்டு அதை முடித்தோர் எண்ணிக்கை 49 மட்டுமே எனவும் கூறப்படுகின்றது.
போட்டியில் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை, பந்தயவீரர்கள் புளொக்கைச் சுற்றி நடப்பார்களாம்.
இந்த நிலையில் புளோக்கைச் சுற்றிச் சுற்றிச் செல்வதால் ஏற்படக்கூடிய சலிப்பே பந்தயத்தின் ஆகப் பெரிய சவால் எனவும் கூறப்படுகின்றது.