கனடாவில் எந்த துறைகளில் வேலை வாய்ப்பு காணப்படுகின்றது
கனடாவில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு அதிகளவில் காணப்படுகின்றது.
நாட்டின் கல்வி முறைமை மற்றும் சனத்தொகை பரம்பல் மாற்றம் போன்ற காரணிகளினால் இவ்வாறு ஆளணி வளத்தில் கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
பெருந்தொற்று நிலைமைகளின் பின்னர் நாட்டில் பல்வேறு துறைகளில் கடுமையான ஆளணி வளத்தட்டுப்பாடு நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் ஒரு சில துறைகளில் அதிகளவு கிராக்கி நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியலாளர் மற்றும் கணிதம் ஆகிய துறைசார் விற்பன்னர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்திறமையுடைய ஆளணி வளத்திற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2025ம் ஆண்டளவில் 500000 குடிப்பெயர்வாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியப்படையினருக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.