கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட மலையேறி
கனடாவின் நோர்த் வென்கூவர் பகுதியில், மலையேறி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் பின், மவுண்ட் சீமூர் மலை அருகே காணாமல் போன மலையேறியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
காலை 9:40 மணியளவில், நோர்த் சோர் North Shore Rescue மீட்புக் குழு சமூக ஊடகங்களில் வெளியிட்ட செய்தியின்படி, "மவுண்ட் சீமூரில் ஒரு ஹைக்கரை தேடும் பணியில் எங்கள் குழு ஈடுபட்டுள்ளது" என தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து பிற்பகலில், நோர்த் வென்கூவர் பொலிசார் வெளியிட்ட அறிக்கையில்,
"காணாமல் போன மலைறேி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்" என உறுதி செய்தனர்.
"மலையேறியின் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" என பொலிசார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.