பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் 129 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் கால் பந்து மைதானத்தில் கலவரத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில் குறைந்தது 129 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா கிழக்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள நடந்த கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 180 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறைத் தலைவரின் கருத்து
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தி மாநாட்டில், மாகாண காவல்துறைத் தலைவர் நிகோ அஃபின்டா, "நாங்கள் வருந்துகிறோம், வருத்தப்படுகிறோம்" என்று கூறியுள்ளார்.
இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியதால், "போட்டியில் அரேமா ரசிகர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்று பொலிஸார் பரிந்துரைத்துள்ளனர்" என்று அவர் கூறியுள்ளார்.
இறந்தவர்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக அபிந்தா கூறியுள்ளார்.
மலாங் சுகாதாரத் தலைவர் விட்ஜண்டோ விட்ஜோயோ நகரில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக உயரந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.