பிரித்தானியாவில் புகைப்பிடிப்பதை தவிர்த்து லொட்டரி வாக்கிய நபருக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Shankar
Report this article
பிரித்தானியாவில் டெலிவரி டிரைவர் ஒருவர் புகைப்பிடிப்பதை தவிர்த்து, லொட்டரி ஸ்கிராட்ச் கார்டு வாங்கிய நிலையில், அவர் தற்போது 1 மில்லியன் வென்று இன்ப அதிர்ச்சியில் மூழ்கி போயுள்ளார்.
பிரித்தானியாவின் Southampton-ஐ சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க John McFadden என்பவர், கடந்த மாதம் அங்கிருக்கும் கடை ஒன்றில் புகைப்பிடிப்பதற்காக vape வாங்க சென்றுள்ளார்.
ஆனால், புகைப்பிடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து, அங்கு நேஷனல் லொட்டரியின் ஸ்கிராட்ச் கார்டை வாங்கியுள்ளார்.
அதன் பின் அந்த கார்டை அவர் கீறத் துவங்கிய போது, முதலில் 50,000 பவுண்ட் என விழுக, மிகவும் மகிழ்ச்சியடைந்து, அடுத்த முறை கீறிய போது, மீண்டும் ஒரு 50,000 பவுண்ட் என மொத்தம் 1 மில்லியன் பவுண்ட்(இலங்கை மதிப்பில் 275050702 கோடி ரூபாய்) டொலரை வென்றார்.
இதை முற்றிலும் எதிர்பார்க்காத அவர் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிபோனார்.
டெலிவரி டிரைவாக வேலை செய்து வரும் இவர், இந்த அதிர்ஷ்டத்திற்கு பின் வேலையை விடுவதோ, ஓய்வு பெறுவதோ என்ற எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், அதே சமயம் என் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க விரும்புவதாகவும், நான் மனைவியை விவாகரத்து செய்த பிறகு, என் குழந்தைகள் Weymouth நகருக்கு சென்றார்கள், எனவே இப்போது அவர்களும் என் பேரப்பிள்ளைகளும் அனைவரும் அங்கே வாழ்கிறார்கள்.
நான் என்னால் முடிந்தவரை அவர்களைப் பார்த்து வருகிறேன். முன்பு வேனை ஓட்டி பார்த்து வந்தேன், இப்போது இந்த பரிசு விழுந்துள்ளது என்று கூறியுள்ளார்.