மாமியார் மாமனாருக்கு நச்சுக் காளான் கொடுத்து கொலை; கணவருக்கு கோழி குருமா
ஆஸ்திரேலியாவில் எரின் பேட்டர்சன் (Erin Patterson) என்ற பெண் கோழி குர்மாவில் நஞ்சு கலந்து கணவரைக் கொல்ல முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை எரின் பேட்டர்சன் (Erin Patterson) ஏற்கனவே மாமியார் மாமனாரை நச்சுக் காளான் கொடுத்து கொலை செய்தமை நீதிமன்றத்தில் நிரூபணமானது.
25ஆம் திகதி தண்டனை
இந்நிலையில் கணவரையும் கொல்ல முயன்றதாக பெண் மீது குற்றம் சுமத்தப்படுள்ளது. எரின் பேட்டர்சன் (Erin Patterson)மற்றும் அவரது கணவருக்கும் உறவில் கசப்பு ஏற்பட்டபின் சுவையான உணவைத் தந்து கணவரைக் கொல்ல முயன்றதாக கூறப்படுகின்றது.
பேட்டர்சன் 2021-2022க்கு இடைபட்ட காலத்தில் 3 முறை கணவரைக் கொல்ல முயன்றதாகச் சொல்லப்படுகிறது. கோழி குர்மா சாப்பிட்டபின் கணவர் உடல்நலம் குன்றி சுயநினைவற்ற நிலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பேட்டர்சனின் கணவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இதற்குமுன் நடந்த விசாரணையின் தொடக்கத்தில் கருத்தில் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் மாமனார், மாமியாரைக் கொன்ற வழக்கில் பேட்டர்சனுக்கு ஆகஸ்ட் 25ஆம் திகதி தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது