Molecule எடை குறைப்பு மாத்திரை; படையெடுக்கும் ரஷ்ய மாணவர்கள்
ரஷ்யாவில் 'மொலிக்யூல்' (Molecule) என்ற பெயரில் இணையத்தில் விற்கப்படும் எடை குறைப்பு மாத்திரை, டிக்டொக் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்து, தீவிர பக்கவிளைவுகளை ஏற்படுத்தி வருகிறதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளில் இயற்கையான பொருட்கள் இருப்பதாக சுற்றுத்தாள்களில் குறிப்பிடப்பட்டாலும், சோதனையில் இது தடை செய்யப்பட்ட மருந்தான 'சிபுட்ராமைன்' (Sibutramine) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இளைஞர்களுக்கு மிகவும் ஆபத்தானது
இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக் கூடியது என்பதால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்படப் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர்களுக்குப் பசி குறைதல், தீவிர பதற்றம், தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மூன்று பாடசாலை மாணவர்கள் அளவுக்கு அதிகமாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன மருந்துச்சீட்டு இல்லாமல் சிபுட்ராமைன் வாங்குவதும் விற்பதும் ரஷ்யாவில் குற்றவியல் குற்றம் ஆகும்.
எனினும் , சட்டவிரோத விற்பனையாளர்கள் பெயர்களை மாற்றியும், விளையாட்டு ஊட்டச்சத்து என்று வகைப்படுத்தியும் இதன் விற்பனையைத் தொடர்ந்து வருகின்றனர்.
எடை குறைப்பு கோளாறுகள் உள்ள இளைஞர்களுக்கு இந்த மாத்திரை மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.