அமெரிக்காவிடமிருந்து 3 பில்லியன் வரி வசூலித்த கனடா
அமெரிக்காவிடமிருந்து மூன்று பில்லியன் டொலர் வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவுக்கு எதிராக விதிக்கப்பட்ட வரிகளில் கனடா இதுவரை 3 பில்லியன் டொலர் மட்டுமே வசூலித்துள்ளதாக கனடா நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது, லிபரல் அரசாங்கம் இந்த நிதியாண்டில் 20 பில்லியன் டொலர் வசூலிக்கலாம் என்ற தேர்தல் வாக்குறுதியின் ஒரு சிறு பகுதி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

கனடா பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க, கடந்த செப்டம்பரில் CUSMA (கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம்) விதிமுறைகளுக்குட்பட்ட பெரும்பாலான இறக்குமதிகளிலிருந்து வரிகளை நீக்க ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் புதிய வரவுசெலவுத் திட்டத்தில் முந்தைய நிதி ஆண்டை விட அதிக பற்றாக்குறை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்னி இதுகுறித்து கடந்த வாரம் மலேசியாவில் பேசியபோது, அமெரிக்காவுடன் இன்னும் ஒப்பந்தம் ஏற்படாதபோதும் வரிகளை நீக்கியது சரியான முடிவாக இருந்தது என்று கூறினார்.
அந்த பதிலடி வரிகளின் மதிப்பு குறைந்து வந்தது. உலகில் அமெரிக்காவுக்கு எதிராக வரி விதித்த நாடுகளில் ஒன்றாக கனடா மட்டுமே இருந்தது. ஆனால் இவ்வாறான வரிகள் உள்ளூரிலும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.