மொன்ட்ரியலின் புதிய மேயராக முன்னாள் அமைச்சர் சொராயா தெரிவு
மொன்ட்ரியால் நகரின் புதிய மேயராக முன்னாள் மத்திய அமைச்சர் சொராயா மார்டினஸ் பெர்ராடா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கனடாவுக்கு அகதியாக வந்த சிலி நாட்டு பெண்ணே இந்த சொராயா என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரி அரசு பதவி விலகியுள்ளது.

மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் பெர்ராடா தலைமையிலான என்சாம்பிள் மாண்ட்ரியல் (Ensemble Montréal) கட்சி, முந்தைய மேயர் வலெரி பிளாந்தே தலைமையிலான ப்ரொஜெ மான்ட்ரியல் (Projet Montréal) ஆட்சியால் திருப்தியில்லாத மக்களின் வாக்குகளை ஈர்த்தது.
பிளாந்தே கடந்த ஆண்டு மூன்றாவது முறை போட்டியிடமாட்டேன் என அறிவித்திருந்தார். பெர்ராடா, பிளாந்தேவின் வாரிசு லூக் ரபூயினை 29,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இன்றிரவு மொன்ட்ரியல் தைரியத்தையும் விருப்பத்தையும் தேர்ந்தெடுத்துள்ளது.
இது மாற்றத்திற்கான ஒரு தெளிவான செய்தி சொராயா தனது வெற்றி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மொன்ட்ரியல் தற்போது புதிய வரலாறு படைத்துள்ளது, பல்வேறு பின்புலத்திலிருந்து வந்த ஒருவரை மேயராகத் தேர்ந்தெடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.