ஒரு சின்ன மனக் குழப்பம்... 200,000 டொலர் லொட்டரி பரிசை இழக்கவிருந்த பெண்
அமெரிக்காவில் 200,000 டொலர் லொட்டரி பரிசை வென்ற பெண் ஒருவர் சிறு மனக்குழப்பத்தால் அந்த சீட்டையே தொலைக்கவிருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வட கரோலினா பகுதியை சேர்ந்த 60 வயது ஜாக்குலின் லே என்பவரே லொட்டரியில் பெருந்தொகை அள்ளியவர். உள்ளூர் உணவுச் சந்தை ஒன்றில் இருந்து சுமார் 6 டொலர் மதிப்பிலான லொட்டரி ஒன்றை வாங்கியுள்ளார் ஜாக்குலின்.
ஆனால் பரிசை வெல்லும் நம்பிக்கை அவருக்கு அறவே இல்லை என்றே கூறியுள்ளார். லொட்டரி சீட்டை குப்பையில் வீசுவதற்கு முன்னர் ஒருமுறை கூட பரிசு இலக்கங்களை அவர் சரி பார்க்க முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையிலேயே தமது லொட்டரி சீட்டுக்கு 200,000 டொலர் பரிசு கிடைத்துள்ளதை அவர் உறுதி செய்துள்ளார். ஒரு நொடி நம்ப முடியாமல் வாய்விட்டு கத்தியதாக கூறும் ஜாக்குலின், உடனடியாக தமது மகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
தற்போது மாகாண வரிகள் நீக்கப்பட்டு, அவருக்கு 142,021 டொலர்கள் அவரது கணக்கில் செலுத்தப்படும் என்றே கூறப்படுகிறது.
ஒரு சிறு மனக் குழப்பத்தால் பெருந்தொகையை அவர் இழக்க நேர்ந்திருக்கும் என்றே கூறப்படுகிறது.