இன்றும் குறைந்தது தங்கம் விலை; சவரன் எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்றத்துடன் இருந்த நிலையில் நேற்றும், இன்று தொடர்ந்து இரண்டு நாட்களாக குறைந்து காணப்படுகின்றது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4434 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4450ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 16 குறைந்துள்ளது.
அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 35,600-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 128 குறைந்து ரூ.35,472-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 69.30 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.00குறைந்து 68.30 விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 16 குறைந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 128 விலை குறைந்துள்ளது.