ஒன்டாரியோவில் வீடு தீக்கிரையானதில் 19 வயது இளம்பெண் உயிரிழப்பு
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள லாயலிஸ்ட் டவுன்ஷிப் பகுதியில் ஏற்பட்ட வீட்டு தீ விபத்தில், 19 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒன்டாரியோ மாகாண காவல் துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
மில்ஹேவன் சாலை (Millhaven Road) பகுதியில் உள்ள ஒரு வீட்டில், வியாழக்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து பொலிஸார் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசர சேவையினர் சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து நடந்தபோது, அந்த இளம்பெண் காணாமல் போயிருந்ததாக முதலில் தகவல் வெளியாகியது.
பின்னர் மேற்கொண்ட விசாரணையின் போது, அவரின் உடல் வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விபத்து நேரத்தில் அவர் தனியாகவே வீட்டில் இருந்ததாகவும், அவரது பெயர் தற்போது வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தின் காரணம் தொடர்பான விசாரணையை ஒன்டாரியோ தீயணைப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.