கடற்கரையில் நடந்து சென்ற பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்: என்ன தெரியுமா?
கடற்கரையோரம் நடந்து சென்றால் கிளிஞ்சல்கள் கிடைக்கும். ஆனால் தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணை தற்போது கோடீஸ்வரராக கடற்கரை மாற்றியுள்ளது. சிரிபான் (49) என்ற பெண் கடற்கரையில் காலார நடந்து சென்றுள்ளார். அப்போது வித்தியாசமான பொருள் ஒன்று கடற்கரையோரம் ஒதுங்கி கிடப்பதை பார்த்துள்ளார்.
அருகே சென்று பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளது. அது தங்கமோ வெள்ளியோ இல்லை. அதைவிடவும் விலை உயர்ந்த திமிங்கலத்தின் வாந்தி. ஆமாம். திமிங்கலத்தின் வாந்தி அரிய பொருளாக பார்க்கப்படுகிறது. திமிங்கலத்தின் வாந்தி, அதன் விந்தணுச் சுரப்பில் இருந்து வெளிப்படும் மெழுகு போன்ற பொருளை உள்ளடக்கி உருவாகும். இது, வாசனை திரவியங்களின் முக்கிய பொருளாகும்.
திமிங்கலத்தின் வாந்தி கலந்து உருவாக்கப்படும் வாசனை திரவியங்கள் விலை உயர்ந்தவை. அப்படிப்பட்ட அரியவகை பொருளான திமிங்கலத்தின் வாந்தியை பெறுவதற்கு முன்னணி வாசனை திரவிய நிறுவனங்கள் காத்துக்கிடக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு அரிய பொருள்தான் கடற்கரையில் சிரிபானுக்கு கிடைத்துள்ளது.
இந்திய மதிப்பில் 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் வாந்தியைத் தான் சிரிபான் கண்டெடுத்துள்ளார். தற்போது விற்பனையை எதிர்பார்த்து காத்திருக்கும் சிரிபான், இது தனக்கு அதிர்ஷம் தான்.
இதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும். தன் குடும்பத்தின் வாழ்வாதாரமே மாறவுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்