கட்சித் தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதில்லை
லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என தொழில் அமைச்சர் ஸ்டீவன் மெக்கினன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலைத்தளம் ஒன்றில் இது தொடர்பில் அவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
போதிய அளவு கால அவகாசம் இல்லை எனவும் இதனால் பிரசாரம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுவதாகவும் மெக்கினன் தெரிவித்துள்ளார்.
எனவே தாம் எதிர்வரும் கட்சி தலைமைத்துவத்திற்கான தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரும் பிரதமருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் கட்சித் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதன்படி லிபரல் கட்சியின் புதிய தலைவர் நியமனம் விரைவில் நடைபெற உள்ளது. பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் கட்சித் தலைவர் பதவி வெற்றிடம் நிரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித் தலைவராக தெரிவாகும் நபர் நாட்டின் பிரதமராகவும் கடமையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் லிபரல் கட்சி ஆட்சியையும் முன்னெடுக்கும் சாத்தியங்கள் உண்டு எனவும் அதன் பின்னர் பொது தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே இந்த கட்சி தலைமை பதவி மற்றும் பிரதமர் பதவிக்காக லிபரல் கட்சியில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை வெகு குறைவாகவே காணப்படுகின்றது.
எனினும், தற்போதைக்கு கட்சியின் தலைமை பதவியில் போட்டியிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்கள் நாட்டம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது வகுத்து வரும் அமைச்சுப் பதவியின் பொறுப்புக்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாக ஸ்ரீ வன்மையாக தெரிவித்துள்ளார்