பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியின் வெற்றியை கொண்டாடிய அதிபர் மேக்ரான்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி போலந்து அணியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்துள்ளது.
பிரான்ஸ் வீரர் ஒலிவியர் ஜிரூட் 44-வது நிமிடத்தில் கோலை அடித்து கணக்கை தொடங்கி வைத்தார்.
களத்தில் பம்பரமாக சுழன்று வந்த எம்பாப்வே 74-வது நிமிடத்திலும், 90-வது நிமிடத்திலும் பிரமாதமான ஷாட்டுகள் மூலம் கோல் போட்டு எதிரணியை திக்குமுக்காட வைத்தார்.
இதனால் போலந்தை 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தியது.
En quarts ! pic.twitter.com/8GS5TTFrep
— Emmanuel Macron (@EmmanuelMacron) December 4, 2022
இந்த நிலையில், பிரான்ஸின் வெற்றியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) கொண்டாடினார்.
அவர் தனது டுவிட்டரில், பிரான்ஸ் வீரர்கள் கைலியன் எம்பாப்பே மற்றும் ஒலிவியர் ஜிரூட் படங்களை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.