பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலநடுக்கம்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் கரையோர பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் நான்கு ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கும் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில நடுக்கம் காரணமாக எவ்வித சேதங்களும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் வான்கூவார் தீவுகள் ஆகியவற்றில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தை பல நூற்றுக்கணக்கானவர்கள் உணர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில நடுக்கம் தொடர்பில் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அமெரிக்க வாஷிங்டன் மாநில மக்கள் சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அடிக்கடி இவ்வாறான சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.