தொலைந்துபோன விமானத்தை தேடும் மலேசியா ; 11 ஆண்டுகளாய் நீடிக்கும் புதிர்!
11 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் இந்தியப் பெருங்கடலில் தொடங்கியுள்ளன.
Ocean Infinity நிறுவனத்தின் ஆழ்கடல் ஆதரவுக் கப்பல் Armada 7806, பெர்த் (Perth) கடற்கரையிலிருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவைச் சென்றடைந்திருப்பதாக ஆஸ்திரேலிய, பிரிட்டன் ஊடகங்களின் அறிக்கை கூறுகிறது.
11 ஆண்டுகளாய் நீடிக்கும் புதிர்
இது தொடர்பில் அமெரிக்க, பிரிட்டன் நிறுவனங்களின் கடலடி தானியக்க இயந்திரங்கள் இந்தியப் பெருங்கடலின் தரைப் பகுதியை ஆராயத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது .
15,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதிய தேடல் பணி 6 வாரம் நீடிக்கும் என்பதனால் Ocean Infinity நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சு கடந்த ஆண்டு டிசம்பரில் கூறியிருந்தது.
அதேவேளை விமானத்தின் பாகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் அதற்கான செலவை மலேசியா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்றும், ஏதேனும் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 70 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 93 மில்லியன் வெள்ளி) செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியப் பெருங்கடலில் 120,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மலேசியா தேடுதல் மேற்கொண்டது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் பெய்ச்சிங்கிற்குப் புறப்பட்ட MH370 விமானம் பிறகு காணாமல் போன நிலையில், விமானத் துறை வரலாற்றில் மிகப் பெரிய மர்மச் சம்பவமாக அது கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.