தனது சொந்த செலவில் வகுப்பறையை அலங்கரித்த ஆசிரியர்! குவியும் பாராட்டுகள்
மலேசியாவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் பாடசாலை வகுப்பறையில் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அலங்கரித்து உள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நாட்டில் இயங்கிவரும் பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு சரியான இருக்கைகள் கூட இருக்காது.
இதுபோன்ற பாடசாலைகளில் பணியாற்றும் சில ஆசிரியர்கள் தங்களால் முடிந்தவரை செலவு செய்து அதனை சரிசெய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மலேசியாவில் கமல் டார்வின் என்ற அந்த ஆசிரியர், தான் கடினமாக சம்பாதித்ததன் மூலம் கிடைத்த போனஸ் பணத்தில் பாடசாலை வகுப்பறையில் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அலங்கரித்து உள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த ஆசிரியரின் செயலை பாராட்டி பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.