இந்திய வீரர்கள் வெளியேற கெடு... சீனாவிடமிருந்து ராணுவ உதவிகள்! மாலைத்தீவின் பயங்கர திட்டம்
மாலைத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேறுவதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சீனாவிடம் இருந்து இலவசமாக ராணுவ உதவிகளை பெறும் வகையில் நேற்றையதினம் (04-03-2024) ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில், மாலத்தீவு பாதுகாப்புத்துறை மந்திரி முகமது காசன் மவுமூன், சீனாவின் சர்வதேச ராணுவ ஒத்துழைப்பு அலுவலக துணை இயக்குனர் மேஜர் ஜெனரல் ஜாங் பாவ்கன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதாக மாலத்தீவு மாலத்தீவு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இருப்பினும், ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத 12 ஆம்புலன்ஸ்களை மாலத்தீவுக்கு சீன அரசாங்கம் பரிசாக வழங்கியுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.